நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய காலக்கட்டத்தில், இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.
ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து விதி எண் பெறப்படுகிறது. எண் கணிதத்தில் மொத்தம் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரி, இப்போது 29 செப்டம்பர் 2024 முதல் 05 அக்டோபர் 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த வாரம் உறவுகளைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். வேலையைப் பொறுத்தவரை அருமையாக இருக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களை சந்திக்க நேரிடும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் சுமாராகவே இருக்கும். வியாபாரிகள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இருமல் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த வாரம் உறவுகளைப் பொறுத்தவரை, துணையின் மீது அதிக அன்பை காட்டுவீர்கள். மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். வணிகர்களுக்கு அதிக லாபத்தைத் தரக்கூடிய புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த வாரம் நீங்கள் பாதுகாப்பற்ற உணர்வுகளை கொண்டிருக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களை சந்திக்கலாம். தம்பதிகளிடையே தவறான புரிதல் ஏற்படலாம். மாணவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகும். வணிகர்களால் அதிக லாபத்தை ஈட்ட முடியாமல் போகலாம். மேலும் வணிக கூட்டாளர்களுடன் சிக்கல்களை சந்திக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு சுமாராக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மாணவர்கள் படிப்பில் தடைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோருடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வணிகர்களுக்கு இந்த வாரம் சற்று மந்தமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தம் காரணமாக கால்கள் மற்றும் முதுகில் வலியை சந்திக்க நேரிடும்.
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் படைப்பாற்றலை விரிவுபடுத்த முடியும். இதனால் தொழில் ரீதியாக முன்னேற்றத்தை காண்பார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தொழில் ரீதியாக புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். வியாபாரிகள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நல்ல ஆற்றலுடன் நிறைந்திருப்பீர்கள்.
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் வேலைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட நேரிடும். மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்காது. படிப்பில் கவனம் செலுத்த முடியாது. தொழிலைப் பொறுத்தவரை, உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரம் பொறுமையை இழக்க நேரிடலாம். குடும்ப பிரச்சனைகளால் உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையேயான இடைவெளி அதிகரிக்கலாம். செய்யும் வேலையில் திருப்தி இல்லாததால் வேலைகளை மாற்ற நினைக்கலாம். வணிகர்களுக்கு இந்த வாரம் சற்று மோசமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அதிக மன அழுத்தத்தால் கால் வலி, மூட்டுகளில் விறைப்பு போன்றவற்றை சந்திக்கலாம்.
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தால், நல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் சிறப்பாக இருக்கும்.