Saturday, January 11, 2025

ஏழரை சனி உங்களை புரட்டிப் போடுகின்றதா? யாரெல்லாம் கஷ்டபடுவார்கள்? வாங்க விரிவாக பார்க்கலாம்

- Advertisement -

ஏழரை சனி வாட்டி வதைக்குதா? யாரெல்லாம் கஷ்டபடுவார்கள்..புரட்டாசி சனியில் பெருமாளை சரணடையுங்கள்

நம்பிக்கை துரோகம் செய்பவர்களையும் ஆணவக்காரர்களையும் நேரம் பார்த்து தண்டிப்பார் சனிபகவான். எனவே மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டு மற்றவரை வஞ்சித்து வாழ்பவரின் வாரிசுகளைகூட வாழவிடாமல் தண்டிக்க சனி பகவானுக்கு பிடிக்கும். அத்தகையவர்களை ஏழரை சனி காலத்தில் பிடித்து அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி விடுவாராம் சனிபகவான். அதே நேரத்தில் நேர்மையோடும், நியாயமாகவும் நடந்து கொள்பவர்களை லேசாக சோதித்து விட்டு நிறைய அள்ளிக்கொடுப்பாராம்.

- Advertisement -

ஏழரை சனி

நவ கிரகங்களில் சனி கிரகம் மிக மெதுவாக நகரும் கிரகம். இரண்டரை ஆண்டுகாலம் ஒருவரின் ராசியில் தங்கியிருந்து நல்லதும் கெட்டதுமாக பலன்களை கொடுப்பார் சனிபகவான். சிலருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்படும். மன நலம் கூட பாதிக்கப்படும். காரணமே இல்லாமல் வேலை போகும். என்ன ஆச்சு நேரம் சரியில்லையே என்று யோசிப்பார்கள்.

- Advertisement -
ஏழரை சனி
ஏழரை சனி

உடனே ஜாதகத்தை எடுத்துக்கொண்டு போய் ஜோதிடர்களிடம் பார்ப்பார்கள். அவர்களுக்கு நடைபெறும் தசாபுத்தி, கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து பலன் சொல்வார் ஜோதிடர். சனிபகவானை வைத்து நன்மை, தீமைகள் பலரும் நடைபெறும் எனவேதான் சனி பெயர்ச்சியை எல்லோரும் ஒருவித அச்சத்தோடும் ஆர்வத்தோடும் எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

- Advertisement -

சனி இருக்கும் இடத்தை விட சனியின் பார்வை படும் இடம் பாழ் என்று சொல்வார்கள். அதே நேரத்தில் நல்ல மனம் படைத்தவர்கள், உதவி செய்யும் குணம் கொண்டவர்களை சனிபகவான் தண்டிக்க மாட்டார்.

சனிபகவானுக்கு பிடித்தமான இடம்

சுத்தம் இல்லாத குப்பைகள் நிறைந்த இடம் சனி பகவானுக்கு அதிகம் பிடிக்கும். அன்றாடம் சுத்தம் செய்யாத வீட்டிலும், அனுதினம் அழுகுரல் கேட்கும் இல்லத்திலும் சனி பகவான் நீங்காமல் நிரந்தரமாக இருப்பார். தன் தீயபார்வையால் எப்படியும் திரும்பி பார்ப்பார்.

ஏழரை சனி
ஏழரை சனி

குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்களை கண்டாலும், தலைசீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்களை கண்டாலும் சனி பகவானுக்கு பிடிக்கும். அவர்களை பிடித்துக்கொள்வார். சனிக்கு எது பிடிக்கும் விளக்கேற்றப்படாமல் இருள் சூழ்ந்த இடங்கள், எப்போதும் அமங்கல சொற்களை பேசுபவர்கள் சனிக்கு மிகவும் பிடித்தமானவர்கள்.

உலர்த்தாத துணியை உடுத்துபவர்களை கண்டால் சனி பகவானுக்கு கொள்ளை பிரியம். உடனே பற்றிக் கொள்வார். எனவே எப்போதும் சுத்தமாக இருப்பதோடு நல்ல சொற்களையே பேசுங்கள் என்று பெரியவர்கள் கூறுவது அதற்குத்தான். சனி பகவான் யாரை பிடிப்பார் ஈரம் சொட்ட சொட்ட வீட்டினுள் செல்பவர்களை பார்த்தால் சனி பகவான்க்கு அவர்கள் மீது பாசம் அதிகம், உடனே அவர்களை பீடித்துக் கொள்வார்.

முதல்நாள் உடுத்திய துணியை மறுநாளும் பயன்படுத்துபவர்களை பாத்தால் சனி பகவான் மிகவும் பிடிக்கும். தலைக்கனம் கொண்டவர்களைப் பிடித்து தலையில் தட்டி குட்டி வைப்பார் சனிபகவான். சனி கொடுக்கும் தண்டனை மாற்றான் மனைவியை அநியாயமாக அடைய நினைக்கும் சன்டாளர்களை முதலில் ஊக்குவித்து, பின் அவமானப்படுத்துவார் சனிபகவான்.

தாய்க்கு அடங்காத பிள்ளைகள், தகப்பனுக்கு அடங்காத தனயன், உடன்பிறந்தோரை வஞ்சிக்கும் துரோகி, இவர்களை சனி காலநேரம் பார்த்து தலையில் குட்டி சரியான தண்டனை தருவாராம். பொய், களவு, சூது, வாது செய்பவர்களை ஊக்குவித்து, கடைசியில் காலை வாரி விட்டு தனக்கே உரிய பாணியில் தண்டனைத்தருவார் சனிபகவான்.

புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் விரதம்

சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனி பகவானுக்கு பிடித்தமானது. சனிபகவான் அளிக்கும் தண்டனையில் இருந்து தப்பிக்க அனுமனையும், பெருமாளையும் சரணடையுங்கள். புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை விளக்கேற்றி வணங்கினால் ஏழரை சனி, அஷ்டமத்து சனி பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். காகத்திற்கு உணவு கொடுக்கள் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைப்பவர்களை சனி பகவான் நெருங்குவதே இல்லை.

ஏழரை சனி
ஏழரை சனி

வலம்புரி சங்குள்ள வீடு, சாலகிராமத்தை பூஜிப்பவர்களை சனி பகவான் படுத்துவதில்லை. முடிந்த வரைக்கும் நேர்மையாகவும் அடுத்தவர்கள் பொருளுக்கு ஆசைப்படாமலும் இருப்பதோடு யாரையும் ஏமாற்றாமல் இருந்தாலே போதும் சனிபகவான் யாரையும் சங்கடப்படுத்தமாட்டார்.

மன சுத்தம் அவசியம் சுத்தமும் சுகாதாரமும் நிறைந்தவர்கள், நேர்மையானவர்களை சனிபகவான் பிடித்தாலும் சோதனைகளை அளித்து பாதுகாப்பார் சனிபகவான். சத்தியம் தவறாதவர்கள் மனதில் நித்திய வாசம் செய்வாள் அன்னை மகாலட்சுமி. அந்த இடத்தை திரும்பிக்கூட பார்ப்பதில்லை சனி பகவான். எனவே உடல் சுத்தம் மட்டுமல்லாது மனது சுத்தத்தோடு இருப்பவர்களை சனி தண்டிக்க மாட்டார்.

சனி பகவானின் பாசப்பார்வை

பித்ரு கடன் சரிவர செய்பவர்களை சனி பகவான் கருணையுடன் பார்ப்பார். ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனி பகவான் பீடிப்பதில்லை. நமச்சிவய எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பகவான் பாதிப்பதில்லை.

பிரதோஷ வழிபாடு செய்பவர்களை சனி பிடிப்பதில்லையாம். எனவே சனிக்கிழமை மறக்காமல் பெருமாள் கோவிலுக்கோ, சிவன் கோவிலுக்கோ சென்று விளக்கேற்று வழிபடுங்கள் சனிபகவான் தரும் சங்கடங்களில் இருந்து தப்பிக்கலாம்.

+++++++++++++++++++++++++++++

கீழே உள்ள உங்கள் ராசியினை கிளிக் செய்வதன் மூலம் உங்களுடைய ராசி பலன்களை அறிய முடியும்.

 

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

2025-ல் கேது பெயர்ச்சி: தொழிலில் அதிர்ஷ்டம் சேரும் 3 முக்கிய ராசிகள்!

2025-ல் கேது பெயர்ச்சியின் முக்கிய தாக்கம் ஜோதிடத்தில் ராகு, கேது ஆகிய கிரகங்கள்...

சனிபகவான் உருவாக்கும் ஷஷ மஹாபுருஷ ராஜயோகத்தால் வெற்றி அடையப்போகும் 5 ராசிகள்!

கும்ப ராசியில் சனிபகவான் பெயர்ச்சியால் உருவாகியுள்ள ஷஷ மஹாபுருஷ ராஜயோகம் மிகப்பெரிய...

Tamil Trending News

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: தண்டனையும் விளைவுகளும் (Video)

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: ரசிகர்களிடையே கடும் விமர்சனம் அவுஸ்திரேலிய அணியின்...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் இந்தியா சோகத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்!

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்! சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்...

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் – பிரியா ராமன் போட்ட கண்டிஷன் | BiggBoss Tamil Season 8

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் - பிரியா ராமன் போட்ட கண்டிஷன் Biggboss...

இலங்கையில் புதிய ஆட்டோக்கள்! – பழைய வாகனங்களின் விலை குறையலாம்!

இலங்கையில் புதிய ஆட்டோக்கள் வரவிருக்கும் தகவல் வாகன சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.🔴...

இந்த ராசிகளின் வரமும் சாபமும் என்ன? இப்போது தெரிஞ்சிக்கொள்ளுங்கள்!

இந்த ராசிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ உங்க வரமும் சாபமும் என்னன்னு...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link